கற்றாழை பயன்கள்
கற்றாழை பயன்கள்: பல நூற்றாண்டுகளாக அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த சிகிச்சைகளில் கற்றாழை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அழற்சி, தொற்று பாதிப்பு, எரிச்சல், தீக்காயம், செரிமான பிரச்சனை, அஜீரணம், வீக்கம் போன்ற பாதிப்புகளைக் குணப்படுத்த கற்றாழை உதவுகிறது. முழுக்க முழுக்க சதைப் பற்றுடன் முழுக்க முழுக்க மருத்துவ குணங்கள் அடங்கிய ஒரு தாவரம் என்றால் அது கற்றாழை. நம்முடைய தலை முதல் பாதம் வரையிலும் உள்ள அத்தனை பிரச்சினைக்கு மரு்தாக இருக்கும் கற்றாழை. இது அதிக குளிர்ச்சித் தன்மை கொ்ணடது. அதனால் சளி, ஜலதோஷம், நீர்க்கோர்த்தல் பிரச்சினை ஏற்படும் என்று சிலர் பயப்படுவதுண்டு. அதைவிட இதில் கசப்புத்தன்மை அதிகம் என்பதால் நிறைய பேர் சாப்பிட மாட்டார்கள். அத்தகைய கற்றாழைய எப்படியெல்லாம் சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டால் என்னென்ன பிரச்சினைகள் தீரும் என்று பார்க்கலாம். கற்றாழையில் இருந்து ஜெல்லை எடுத்து அப்படியே நேரடியாக சாப்பிடலாம். அல்லது நீங்கள் தயாரிக்கும் ஜூஸ் அல்லது ஸ்மூத்தியில் கலந்து சாப்பிடலாம். இதன் வழுக்கும் தன்மை மற்றும் மிதமான நறுமணம் சாலட்டில் நல்ல சுவைய...