பாரம்பரிய சிவப்பு அரிசி நன்மைகள்
சிவப்பு அரிசி நன்மைகள்:
நமது பாரம்பரிய அரிசி வகையில் சிவப்பு அரிசி முக்கியமானது இன்று பளபளக்கும் பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியில் மயங்கி இருக்கும் நாம் நம் பாரம்பரிய அரிசியான சிவப்பு அரிசியை பெருமளவு பயன்படுத்துவதில்லை. சிவப்பு அரிசி தரும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
மாடுகட்டு போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனைகட்டி என்று பழைய பாடல் ஒன்றை பெரியவர்கள் பாடுவார்கள். அதாவது நெல் அறுவடைக்கு முடிந்து களத்துக்கு வரும் போது நெல்லை பயிரிலிருந்து பிரித்தெடுக்க மாடுகளை பயன்படுத்துவார்கள். ஆனால் அது செந்நெல்லாக இருந்தால் மாடுகளால் கூட பிரித்தெடுக்க முடியாது. அதனால் தான் யானை கட்டி அடிப்பார்கள்.
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது:
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை சாப்பிடவே கூடாது என்று சொல்வார்கள். ஆனால் சர்க்கரை நோயாளிகள் சிவப்பு அரிசியை எடுத்துகொள்ளலாம். இது உடலில் இருக்கும் நொதிகளுடன் இணைந்து செயலாற்றுகிறது. அதில் ஒன்று குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்பு. இதில் இருக்கும் மெக்னீசியம் ஆனது இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது.
எடை இழப்புக்கு உதவும்:
சிவப்பு அரிசி எடை இழப்பை ஊக்குவிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் உள்ள கொழுப்பு பூஜ்ஜியம் அளவு என்பதால் இதன் நுகர்வு உடலில் எடையை அதிகரிக்க செய்யாது. அரிசியின் வெளிப்புற அடுக்கு அப்படியே வைக்கப்படுவதால் இது நார்ச்சத்தின் கரையக்கூடிய மற்றும் கரையாத இரண்டையும் கொண்டுள்ளது. உடலில் சேரும் உயர் கொழுப்புகளை கட்டுப்படுத்த அதிலிருந்து விடுபட சிவப்பு அரிசியை பயன்படுத்துவது நல்லது.
கொழுப்பை குறைக்கலாம்:
சிவப்பு அரிசியில் மட்டும் தான் வைட்டமின் இ உள்ளது. இது உடலில் இருக்கும் எல் டிஎல் என்னும் கெட்ட கொழுப்பை குறைக்க செய்கிறது. சிவப்பு அரிசியில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை பரிசோதித்ததில் இதை பயன்படுத்தியவர்களுக்கு உடலில் எல்டிஎல் கொழுப்பு குறைந்தது கண்டறியப்பட்டது.
மேலும் இது இதய ஆரோக்கியத்துக்கும் நன்மை செய்யகூடியதாக இருக்கிறது. இதில் உள்ள மொனோக்கோலின் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இது ரத்த கொழுப்பை குறைக்கும் மாத்திரைகளில் சேர்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
செரிமானத்தை மேம்படுத்தும்:
அன்றாடம் உடல் வேலை செய்ய தேவையான ஆற்றலை இது வழங்குகிறது. இது நார்ச்சத்து கொண்டிருப்பதால் மலச்சிக்கல் இல்லாமல் வைத்துகொள்ளும். இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பொருள்களாக உடலில் சென்று சேமிக்கப்படுகிறது. சிவப்பு அரிசி செரிமானத்தன்மையை மேம்படுத்தகூடியது இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி குடல் இயக்கங்களை எளிதாக்குகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.
மெனோபாஸ் அறிகுறி பெண்களுக்கு:
பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை பிரச்சனைக்கு தீர்வளிக்க கூடும். எலும்புகள் மற்றும் பற்களை பராமரிக்கவும் செய்கிறது.இது கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபொராசிஸ் பிரச்சனைகளை தடுக்க செய்கிறது.
ஆஸ்துமாவுக்கு நல்லது:
சிவப்பு அரிசி நுரையீரலை பாதுகாக்கும் சத்துகளை உள்ளடக்கியுள்ளது. இதில் இருக்கும் மெக்னீசியம் ஆஸ்துமாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தக்கூடும். இதிலிருக்கும் செலினியம் தொற்றுநோய்கள் உடலில் அண்டாமல் பாதுகாக்க செய்கிறது.
இதயத்துக்கு நன்மை செய்கிறது:
மற்ற அரிசியில் இல்லாத அளவுக்கு இதில் வைட்டமின் பி 1, பி3 பி6, இரும்புச்சத்து மெக்னீசியம், துத்தநாகம், மாங்கனீசு, செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் மிகுதியாகவே நிறைந்துள்ளது.
இதில் இருக்கும் ஆன் டி ஆக்ஸிடண்ட் இதயத்துக்கு நன்மை செய்யகூடியது.இதில் இருக்கும் வைட்டமின் இ உடலில் ஆற்றல் கொண்ட ஆன் டி ஆக்ஸிடண்ட் உடன் இணைந்து செயல்படும் போது அது இதய நோய்கள் வராமல் இதயத்துக்கு பாதுகாப்பு அளிக்கிறது.
Comments
Post a Comment