கொள்ளு பயறு பயன்கள்

கொள்ளு பயறு பயன்கள் : பல வகையான சிறுதானியங்கள் நமது நாட்டில் அதிகம் விளைவிக்கப்பட்டு மக்களால் உண்ணப்படுகின்றன. அதில் மிகப் பிரபலமான ஒரு சிறுதானியம் கொள்ளு. இந்தக் கொள்ளு பெரும்பாலும் குதிரைகளுக்கு உணவாக கொடுக்கப்படுவது என்பதே பலரும் அறிந்த விடயமாக இருக்கிறது. ஆனால் மனிதர்களுக்கும் பல வகையான ஊட்டச்சத்துக்களை அளிக்கவல்ல ஒரு தானிய தான் கொள்ளு ஆகும். இந்த கொள்ளு பாரதத்தில் அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இருக்கும் மக்களால் அதிகம் உண்ணப்படுகிறது. கொள்ளு தானியத்தில் பல மருத்துவ குணங்கள் இருக்கின்றன. எனவே தான் நம் நாட்டின் பண்டைய மருத்துவ சிகிச்சை முறையான ஆயுர்வேதத்திலும் கொள்ளு பற்றி குறிப்புகள் இருக்கின்றன. அந்த கொள்ளு தானியங்களை நாம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் இயற்கையாகவே கொள்ளுக்கு இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கும் சக்தி உண்டு. இதில் நிறைந்துள்ள அதிக அளவு நார்ச்சத்து உங்களின் இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கும். மேலும் உங்கள...