கொய்யா இலை டீ நன்மைகள்:
கொய்யா பழத்தின் இலைகள் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது. கொய்யா இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தன்மை அதிகம் உள்ளது, எனவே நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும். தொடர்ந்து மூன்று மாதங்கள் கொய்யா இலை டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைந்து, நல்ல கொழுப்புக்களின் அளவு பராமரிக்கப்படும்.
கொய்யா இலையில் புரதம், வைட்டமின்கள் பி 6, கோலைன், வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் போன்றவை இருக்கிறது. கொய்யா இலை துவர்ப்பு சுவை உடையது.
கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒரு முறை தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம். செரிமான பிரச்சனை இருந்தால், கொய்யா இலையின் டீயை குடித்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, செரிமானம் நடைபெறும். மேலும் கொய்யா இலை வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வயிற்றினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். ஆண்கள் கொய்யா இலையை டீ போட்டு குடித்து வந்தால், விந்தணுவின் உற்பத்தி அதிகரிப்பதோடு, விந்தணுவின் தரமும் அதிகரிக்கும்.
கொய்யா இலையைக் கொதிக்க வைக்கும்போது சிறிதளவு துளசியும், இஞ்சியையும் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால், மூச்சுக்குழாய் அலர்ஜி நீங்கும். வயிறு ஒவ்வாமையை உண்டாக்கக்கூடிய உணவை சாப்பிட்டுவிடுவதால் செரிமானம் ஆகாமல் சிலர் சிரமப்படுவதுண்டு.
செரிமான கோளாறு உள்ளவர்கள் ஐந்து கொய்யா இலையையும் கொஞ்சம் சீரகமும் சேர்த்து கொதிக்க வைத்துப் பருகினால் உடனடியாக வயிறு உப்புசம் குறைந்து உணவு சீரணமடையும். உணவு ஒவ்வாமையால் ஏற்படக்கூடிய பாதிப்பும் குறையும்.
கொய்யா இலைகளின் சாற்றை அருந்தும்போது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளின் இன்சுலின் சுரப்பியினைத் தூண்டி சுக்ரோஸ் மற்றும் மால்டோஸ் உள்ளீர்ப்பை தடுக்கிறது, மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. தலையில் ஏற்படும் அரிப்பிற்கு கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒருமுறை ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊறவைத்து அலச வேண்டும். கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒரு முறை தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
மேலும், உங்கள் சரும அமைப்பை மேம்படுத்தவும், முகப்பரு வடுக்கள் நீங்கவும் நீங்கள் விரும்பினால், இலைகளை பயன்படுத்தலாம். முகத்தில் வித்தியாசத்தைக் காணவும் உணரவும் அவற்றை நசுக்கி, புள்ளிகளில் தடவவும். சருமத்தை இறுக்குவதற்கும் அதன் தொனியை மேம்படுத்துவதற்கும் ஒரு காபி தண்ணீரைப் பயன்படுத்துவதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். முடி உதிர்தல் மற்றும் குறைக்கப்பட்ட அளவு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு கொய்யா இலைகளே தீர்வு. ஆக்ஸிஜனேற்றிகள் தங்கள் அதிசயங்களைச் செய்ய அனுமதிக்க, நீங்கள் இலைகளை வேகவைத்து உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம். நீங்கள் மசாஜ் செய்யும் போது தண்ணீர் சூடாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும், தேநீர் உங்கள் நரம்புகளை கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்துவதன் மூலம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
Comments
Post a Comment