அத்திப்பழம் நன்மைகள்:
தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும்வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கும். உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.
அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப்படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும்.
அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது. பெருங்குடலில் ஆங்காங்கே, இறுகிய கழிவுப் பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது.
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒரு வாரம்வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.
தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் கொழுக், மொழுக் என்று வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக உள்ளது. இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவில் உண்டு.
சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து,வெண் புள்ளிகள் மீது பூசலாம்.
அதில் இரும்பு, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், தாமிரம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் எல், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்களின் கலவையாக இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு அத்திப்பழம் சிறந்த மருந்தாக இருக்கும். மலச்சிக்கலை போக்கும் : அத்திப்பழம் நார்ச்சத்து நிறைந்தது என்பதால் மலச்சிக்கலுக்கு நல்லது.
எடை குறையும்:
அத்திப்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் மட்டுமின்றி, கலோரிகள் குறைவு. ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளன. மற்றும் 0.2 கிராம் கொழுப்புக்கள் உள்ளது. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் இதனை ஸ்நாக்ஸாக உட்கொள்வது நல்லது.
இதய நோய்:
அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், ப்ரீ-ராடிக்கல்களினால் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு இதய நோய் ஏற்படும் அபாயம் குறையும். மேலும் இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதால், இதய நோய் வரும் வாய்ப்பு குறையும்.
புற்றுநோய்:
அத்திப்பழத்தில் உள்ள அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால், ப்ரீ-ராடிக்கல்களின் மூலம் டி.என்.ஏ பாதிப்படைவது தடுக்கப்பட்டு, புற்றுநோய் வரும் அபாயம் குறையும்.
இரத்த அழுத்தம்:
உப்பு அதிகம் எடுத்துக் கொள்ளும் போது, உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும். இதனால் சோடியம் மற்றும் பொட்டாசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஆனால் 1 உலர்ந்த அத்திப்பழத்தில் 129 மில்லிகிராம் பொட்டாசியம் மற்றும் 2 மிகி சோடியம் உள்ளது இதனால் இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
இரத்த சோகை:
உலர்ந்த அத்திப்பழத்தில் இரும்புச்சத்து உள்ளது. அதிலும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தின் அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 2% கிடைக்கிறது. உடலில் ஹீமோகுளோபினை எடுத்து செல்வதற்கு இரும்புச்சத்து மிகவும் இன்றியமையாதது. எனவே இதனை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், இரத்த சோகை பிரச்சனை நீங்கும்.
Comments
Post a Comment