சப்பாத்திக் கள்ளி பயன்கள்
சப்பாத்திக் கள்ளி பயன்கள்: இந்தியாவின் கிவி என்று அழைக்கப்படும் பழம் தான் இந்த சப்பாத்திக் கள்ளிப்பழம். இது நல்ல அடர்ந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த கள்ளிச் செடிகள் கடுமையான வறட்சியாக தண்ணீரே இல்லாத இடத்தில் கூட காட்டுச் செடிகளைப் போன்று வேலி ஓரங்களில் வளர்ந்து கிடக்கும். இந்த பழத்தை நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் நம் தலைமுறையினர் பாக்கெட்டுகளில் அடைத்த உணவுகளுக்குக் கொடுக்கும் மரியாதையை இலவசமாக ஆனால் ஆரோக்கியம் தரும் பாரம்பரிய உணவுகளை நாம் மதிப்பதே இல்லை. பொதுவாக இந்த சப்பாத்திக் கள்ளி வறண்ட நிலங்களில் வளரக்கூடியது. ஆனால் அதன் மேலுள்ள முள், அதனாலேயே அதன் அருகில் சென்றிருக்க மாட்டோம். இனிமே அப்படி ஒதுங்கிப் போக மாட்டீர்கள் இதப் படிச்சிட்டா தேடித் தேடி சப்பாத்தி பழத்தைச் சாப்பிடுவீர்கள். பச்சையாக இருக்கும் சப்பாத்திக்காய் பழுக்கும் போது மாறக்கூடிய நிறம் இருக்கிறதே, அவ்வளவு அழகா இருக்கும். நல்ல பழுத்த பழத்தைச் சாப்பிட்டால் வாய் முழுக்க ஒரே சிகப்புதான். அதிகமான இனிப்பு சுவை இல்லாவிட்டாலும், சாப்பிடத்தூண்டு...