பனங்கிழங்கு நன்மைகள்
பனங்கிழங்கு நன்மைகள் (panang kilangu benefits): “இயற்கை உணவே மருந்து ” வணக்கம் நண்பர்களே, நாம் இந்த பதிவில் பனங்கிழங்கின் மகத்துவத்தை பற்றி பார்க்கலாம்.இயற்கையானது நமக்கு பலவகையான சத்து நிறைந்த உணவு பொருட்களை தருகிறது. அதில் ஒன்று தான் இந்த பனங்கிழங்கு. பனங்கிழங்கு என்பது பனைமரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு வகையான கிழங்கு ஆகும்.பனைமரத்தின் பழத்தை சாப்பிட்டுவிட்டு அந்த கொட்டையை தனியாக புதைத்து வைத்து அதில் இருந்து கிடைக்கக்கூடியது தான் இந்த பனங்கிழங்கு. எண்ணற்ற நன்மைகள் நிறைந்த இந்த பனங்கிழங்கு அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஏராளமான பலன்களை நாம் பெறலாம்.வாங்க அதனோட நன்மைகளை பற்றி பார்க்கலாம். பனை கிழங்கில், நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது, குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தவும், இரத்தக் கொழுப்பைக் குறைக்கவும், இருதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் இது உதவும். மேலும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உங்கள் எடையை குணப்படுத்தவும் உதவுகிறது. இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளன, இது உங்கள் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்க முக்கியமானது, ...