பாரம்பரிய சிவப்பு அரிசி நன்மைகள்
சிவப்பு அரிசி நன்மைகள்: நமது பாரம்பரிய அரிசி வகையில் சிவப்பு அரிசி முக்கியமானது இன்று பளபளக்கும் பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியில் மயங்கி இருக்கும் நாம் நம் பாரம்பரிய அரிசியான சிவப்பு அரிசியை பெருமளவு பயன்படுத்துவதில்லை. சிவப்பு அரிசி தரும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம். மாடுகட்டு போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனைகட்டி என்று பழைய பாடல் ஒன்றை பெரியவர்கள் பாடுவார்கள். அதாவது நெல் அறுவடைக்கு முடிந்து களத்துக்கு வரும் போது நெல்லை பயிரிலிருந்து பிரித்தெடுக்க மாடுகளை பயன்படுத்துவார்கள். ஆனால் அது செந்நெல்லாக இருந்தால் மாடுகளால் கூட பிரித்தெடுக்க முடியாது. அதனால் தான் யானை கட்டி அடிப்பார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது: பொதுவாக சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவை சாப்பிடவே கூடாது என்று சொல்வார்கள். ஆனால் சர்க்கரை நோயாளிகள் சிவப்பு அரிசியை எடுத்துகொள்ளலாம். இது உடலில் இருக்கும் நொதிகளுடன் இணைந்து செயலாற்றுகிறது. அதில் ஒன்று குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்பு. இதில்...