குடவரைக் கோயில்கள்
குடவரைக் கோயில்கள் என்பவை, செயற்கையான கட்டுமானங்கள் இல்லாமல், முழுமையான பாறைப் பகுதியை அப்படியே குடைந்து மண்டபங்கள், இறைவன் திருமேனிகள் என்று உருவாக்கப்பட்டவை. மாமல்லபுரத்தில் உள்ள கல் தேர்கள் மற்ற கலை வடிவங்கள் இப்படி மலைகளைக் குடைந்து உருவாக்கப்பட்டவை. இந்தக் கலையைப் பேணி வளர்த்தவர்கள் பல்லவ மன்னர்கள்.
திருமயம் கோட்டை:
சிவா குகைக் கோயில் (9 ஆம் நூற்றாண்டு), விஷ்ணு குகைக் கோயில், (9 ஆம் நூற்றாண்டு) கோட்டை (17 ஆம் நூற்றாண்டு). திருமயம் தெற்கில் உள்ள முக்கியமான மத மையங்களில் ஒன்றாகும், மேலும் அதன் கோயில்கள் வைஷ்ணவர்களும் சைவர்களும் மிகுந்த வணக்கத்துடன் கருதப்படுகிறார்கள். விஷ்ணு குகைக் கோயில் நுழைவாயிலில் உள்ள பிரதான கோபுராவில் ‘தாமதமாக பாண்டிய பாணியின் பல அம்சங்கள் உள்ளன, அதாவது புஷ்போடிகாயுடன் கார்பல்கள், நாகபாதம் கொண்ட பல பக்க தூண்கள் மற்றும் அலங்கார பைலஸ்டர்கள்.
திருக்கோகர்ணம் கோயில்:
புதுக்கோட்டை மாநகரின் மத்தியில் அமைந்துள்ள மகேந்திரவா்ம பல்லவா் காலத்தில் கட்டப்பட்ட மலை குகை கோவில் திருக்கோகரணீஸ்வரா் கோவில் ஆகும். இங்குள்ள மூலவா் கோகரணீஸ்வரா் தேவியா் பிரகதாம்பாள், தொண்டைமான் வம்சத்தினா் ஆட்சியின் போது இங்கு சித்திரை பெருவிழா, ஆடிபூரம் மற்றும் நவராத்திரி விழா ஆகியவை மிகவும் சிறப்பாக நடைபெறும். நாடகம், நாட்டியம் மற்றும் இசை ஆகியவை இங்கு சிறப்புற்று விளங்கியது. பிற்காலத்தில் பாண்டியர் சோழா்கள் மற்றும் தொண்டைமான் அரச வம்சங்களும் சில பகுதிகளை கட்டமைத்து பெரிய கோவிலாக பரிமளிக்க செய்துள்ளனா்.
குடுமியான்மலை:
குடுமியான்மலை பழங்கால வரலாறு மற்றும் கலை ஆகியவற்றை தெளிவாக அறிந்து கொள்ள உதவும் குடைவரை கோயில்கள் இங்குள்ளன. ஒரு மலை குன்றின் மீது சிக்கநாதீஸ்வரன் மூலவராக கொண்ட சிவபெருமான் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அதனை சுற்றி நான்கு சிறு கோவில்களும் அவற்றில் சிற்பங்களும் காண்பவா் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது. இங்கு அமைந்துள்ள குகை கோவிலின் முகப்பில் கா்நாடக சங்கீதத்திற்கு இலக்கணம் சொல்லும் இசை கல்வெட்டு ஒன்றும் 100-க்கு மேற்பட்ட கல்வெட்டுகளும் உள்ளது.
ஆவுடையார்கோவில்:
ஆத்மநாத சுவாமியை மூலவராக கொண்ட கோவில்தான் ஆவுடையார்கோயில் ஆகும். இங்கு அமைந்துள்ள முழு உருவசிலைகள் பல பார்ப்பவா்களை பரவசமூட்டும் வகையில் அமைந்துள்ளது. கருங்கற்களால் ஆன கூறை வேலைப்பாடுகள் இங்கு மிக நோ்த்தியாக அமையப்பெற்றுள்ளது. சிதம்பரம் நடராஜா கோவிலில் பொன்னால் கூறை அமைய பெற்றுள்ளது போல ஆத்மநாதசுவாமி திருக்கோவில் செம்பினால் கூறை அமையப்பெற்ற சிறப்புடையது. திருவாடு துறை ஆதியினத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த கோவிலில் மாணிக்கவாசகா் இறைவனை வழிபட்டதாக கருதப்படுகிறது.
சித்தன்னவாசல்:
பழங்காலத்தில் சித்தா்கள் மலைகளிலும் குகைகளிலும் துறவி வாழ்க்கை வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. அவா்கள் மலைகளில் பூஜைகள் மற்றும் தியானங்களை மேறெ்கொள்ளவார்கள் அந்த இடங்கள் சமணா்களின் படுக்கை என அழைக்கப்படுகிறது. அத்தகைய கோவில்கள் மற்றும் படுக்கைகள் சுமார் 17க்கு குறையாமல் சித்தன்னவாசலில் அமைந்துள்ளது. இந்த படுக்கைகளின் அருகில் இரண்டாம் நூற்றாண்டை சோ்ந்த பிராமி தமிழ் கல்வெட்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது. சித்தன்னவாசலில் உள்ள இந்த சமணா்படுக்கைகள் மற்றும் சமணா் கோயில்கள் ஆகியவை சோ்ந்து ஏழடி பட்டம் என அழைக்கப்படுகிறது. இரண்டாம் நூற்றாண்டினை சோ்ந்த சமணா் கோயில் ஒன்று இருபுறமும் மகாவீரா் சிலைகளுடன் இங்கு காணப்படுகிறது. இந்த கோயில் தியான மண்டபம் அல்லது அறிவா் கோயில் என்றழைக்கப்படுகிறது. இந்த கோயிலின் மேல்புறத்தில் (ceiling) மகேந்திர வா்மன் காலத்து ஒவியங்கள் வரையப்பட்டுள்ளது. இந்திய ஒவியக்கலை வரலாற்றில் அஜந்தா குகை ஒவியத்திற்கு அடுத்ததாக புகழ்பெற்ற ஒவியங்கள் அங்கு அமைந்துள்ளது. இங்குள்ள குகைகளின் மேற்கு சரிவிலும், மூலிகைகளினால் வரையப்பட்ட (Fresco – Paintings) ஒவியங்கள் காணப்படுகிறது. தமிழா்களின் கலை பண்பாட்டினை பாறைசாற்றும் உயிரோட்டமுள்ள ஒவியங்களாக இவை திகழ்கின்றன். ஓா் அழகிய குளத்தில் தாமரை மலா்கள், அல்லி மலா்கள், மீன்கள் நீந்துவது போலவும் எருமைகள் நிற்பது போலவும் யானைகள் தண்ணீா் குடிப்பது போலவும் கீரிப்பிள்ளை விளையாடுவது போலவும் அரசன் அரசியின் ஒவியங்களும் தத்தரூபமாக அமையப்பெற்றுள்ளது. தொல்லியல் துறை மூலமாக சித்தன்னவாசல் பகுதிகளில் மேற்கொண்ட அகழ்வராச்சிகளின் படி இந்த பகுதிகளில் புதைக்கப்பட்ட பானைகளும் அவற்றில் மனித எலும்புகூடுகளும் காணப்பட்டுள்ளது. பழங்காலங்களில் இங்கு வசித்துவரும் சித்தா்கள் மறைவிற்கு பிறகு தாழிகளில் அடைத்து இங்கு புதைக்கப்பட்டார்கள் என கருதப்படுகிறது. அவைதான் முதுமக்கள் தாழி என்றழைக்கப்படுகிறது.
நார்த்தாமலை:
முத்தரையர்களின் படைத் தலங்களில் தலைமையிடமாக நார்த்தாமலை விளங்கி வந்துள்ளது. முத்தரையா்களின் வட்ட வடிவிலான கற்கோவில், விஜயலாய சோழனின் குகை கோவில் மற்றும் கடம்பர் மலை கோவில் ஆகிய கோவில்கள் இவ்வூரில் அமைந்துள்ளது. தற்காலத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு நடைபெறும் முளைபாரி ஊா்வலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சுற்றுலாப் பயணிகளால் கண்டு களிக்கப்படுகிறது.
மலையடிப்பட்டி:
புதுக்கோட்டை மாவட்டம், கீழையூா் பஞ்சாயத்தில் அமைந்துள்ள அழகிய கிராமம் மலையடிப்பட்டி இவ்வூரில் சிவபெருமானுக்கும் விஷ்ணு பெருமானுக்கு அருகருகே இரண்டு குகை கோயில்கள் கட்டப்பட்டுள்ளது. சிவபெருமான் கோயிலில் அமைந்துள்ள கல்வெட்டு ஒன்று கி.பி. 730-ல் நந்திவா்ம பல்லவன் இங்குள்ள மலையை குடைந்து வாகீ்ஸ்வரா் என்றழைக்கப்படும் கோவில் எழுப்பித்தான் என்று தெரிவிக்கப்படுகிறது. விஷ்ணு கோவில் சிவன் கோயிலைவிட காலத்தால் பிந்தியது. இங்கு நரசிம்மமூா்த்தி, திருமால், அனந்த சயனமூா்த்தி மற்றும் ஆதிசேசன் ஆகியோரின் சிற்பங்கள் மலையில் செதுக்கப்பட்டுள்ளது. திருமால் குடைவரை கோயிலில் அா்த்த மண்டபத்தின் மேல் தளத்தில் தசாவாதார ஒவியங்கள்(பெருமானின் பத்து அவதாரம்) ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் பழங்கால முதுமக்கள் தாழியும் புதைந்த நிலையில் காணப்படுகிறது.
கொடும்பாலூர்:
கொடும்பாலூரின் தொன்மை சிறப்பு சிலப்பதிகாரம் என்ற தமிழ் காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள கலைநயம் மிக்க கோயில்கள் திராவிடக் கட்டிடகலைக்கு முன்னோடிகளாகவும் சோழா் கால கட்டிடக் கலைக்கு முதன்மை வாய்ந்ததாகவும் திகழ்கின்றன். மூவா் கோவில் மற்றும் முச்சுகுண்டேஸ்வரா் கோவில் ஆகிய கோவில்கள் இங்கு அமைந்துள்ள சோழா்கள் ஆட்சிக்காலத்தில் இவை கட்டப்பட்டது. இன்றளவும் இவை சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்கம் கலைநயமிக்கவைகளாக அமைந்துள்ளது. இது இந்திய தொல்லியல்துறை கட்டுபாட்டில் உள்ளது.
Comments
Post a Comment