Posts

Showing posts from March, 2022

சப்பாத்திக் கள்ளி பயன்கள்

Image
  சப்பாத்திக் கள்ளி பயன்கள்:    இந்தியாவின் கிவி என்று அழைக்கப்படும் பழம் தான் இந்த சப்பாத்திக் கள்ளிப்பழம். இது நல்ல அடர்ந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த கள்ளிச் செடிகள் கடுமையான வறட்சியாக தண்ணீரே இல்லாத இடத்தில் கூட காட்டுச் செடிகளைப் போன்று வேலி ஓரங்களில் வளர்ந்து கிடக்கும். இந்த பழத்தை நம்முடைய முன்னோர்கள் சாப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் நம் தலைமுறையினர் பாக்கெட்டுகளில் அடைத்த உணவுகளுக்குக் கொடுக்கும் மரியாதையை இலவசமாக ஆனால் ஆரோக்கியம் தரும் பாரம்பரிய உணவுகளை நாம் மதிப்பதே இல்லை.   பொதுவாக இந்த சப்பாத்திக் கள்ளி வறண்ட நிலங்களில் வளரக்கூடியது. ஆனால் அதன் மேலுள்ள முள், அதனாலேயே அதன் அருகில் சென்றிருக்க மாட்டோம். இனிமே அப்படி ஒதுங்கிப் போக மாட்டீர்கள் இதப் படிச்சிட்டா தேடித் தேடி சப்பாத்தி பழத்தைச் சாப்பிடுவீர்கள்.    பச்சையாக இருக்கும் சப்பாத்திக்காய் பழுக்கும் போது மாறக்கூடிய நிறம் இருக்கிறதே,  அவ்வளவு அழகா இருக்கும். நல்ல பழுத்த பழத்தைச் சாப்பிட்டால் வாய் முழுக்க ஒரே சிகப்புதான். அதிகமான இனிப்பு சுவை இல்லாவிட்டாலும், சாப்பிடத்தூண்டு...

கற்றாழை பயன்கள்

Image
  கற்றாழை பயன்கள்:     பல நூற்றாண்டுகளாக அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த சிகிச்சைகளில் கற்றாழை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அழற்சி, தொற்று பாதிப்பு, எரிச்சல், தீக்காயம், செரிமான பிரச்சனை, அஜீரணம், வீக்கம் போன்ற பாதிப்புகளைக் குணப்படுத்த கற்றாழை உதவுகிறது.    முழுக்க முழுக்க சதைப் பற்றுடன் முழுக்க முழுக்க மருத்துவ குணங்கள் அடங்கிய ஒரு தாவரம் என்றால் அது கற்றாழை. நம்முடைய தலை முதல் பாதம் வரையிலும் உள்ள அத்தனை பிரச்சினைக்கு மரு்தாக இருக்கும் கற்றாழை. இது அதிக குளிர்ச்சித் தன்மை கொ்ணடது. அதனால் சளி, ஜலதோஷம், நீர்க்கோர்த்தல் பிரச்சினை ஏற்படும் என்று சிலர் பயப்படுவதுண்டு. அதைவிட இதில் கசப்புத்தன்மை அதிகம் என்பதால் நிறைய பேர் சாப்பிட மாட்டார்கள். அத்தகைய கற்றாழைய எப்படியெல்லாம் சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டால் என்னென்ன பிரச்சினைகள் தீரும் என்று பார்க்கலாம்.    கற்றாழையில் இருந்து ஜெல்லை எடுத்து அப்படியே நேரடியாக சாப்பிடலாம். அல்லது நீங்கள் தயாரிக்கும் ஜூஸ் அல்லது ஸ்மூத்தியில் கலந்து சாப்பிடலாம். இதன் வழுக்கும் தன்மை மற்றும் மிதமான நறுமணம் சாலட்டில் நல்ல சுவைய...

பனங்கிழங்கு நன்மைகள்

Image
  பனங்கிழங்கு நன்மைகள் (panang kilangu benefits):            “இயற்கை  உணவே மருந்து ”  வணக்கம் நண்பர்களே, நாம்  இந்த பதிவில் பனங்கிழங்கின் மகத்துவத்தை பற்றி பார்க்கலாம்.இயற்கையானது நமக்கு பலவகையான சத்து நிறைந்த உணவு பொருட்களை தருகிறது. அதில் ஒன்று தான் இந்த பனங்கிழங்கு. பனங்கிழங்கு என்பது பனைமரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு வகையான கிழங்கு ஆகும்.பனைமரத்தின் பழத்தை சாப்பிட்டுவிட்டு அந்த கொட்டையை தனியாக புதைத்து வைத்து அதில் இருந்து கிடைக்கக்கூடியது தான் இந்த பனங்கிழங்கு. எண்ணற்ற நன்மைகள் நிறைந்த இந்த பனங்கிழங்கு அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஏராளமான பலன்களை நாம் பெறலாம்.வாங்க அதனோட நன்மைகளை பற்றி பார்க்கலாம். பனை கிழங்கில், நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது, குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்தவும், இரத்தக் கொழுப்பைக் குறைக்கவும், இருதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் இது உதவும். மேலும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உங்கள் எடையை குணப்படுத்தவும் உதவுகிறது. இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளன, இது உங்கள் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்க முக்கியமானது, ...

அதிமதுரத்தின் பயன்கள்யன்கள்

Image
    அதிமதுரத்தின் பயன்கள்: அதிமதுரம் தூள்   கலந்த நீரை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் பருகி வந்தால்  மூட்டு வலிகள்  நீக்கும். உடலின் வாதத்தன்மை அதிகரிப்பை கட்டுக்குள்  கொண்டு வரும். சிறுநீரகங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.  அதிமதுரத்தின் போடி சளி மற்றும் இருமல் போன்றவற்றை நீக்கும்.    அதிமதுரம் பொருள்: அதிமதுரத்திற்கு   அதிங்கம், மதுங்கம்,ஆட்டி  ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இனிப்பு சுவை அதிகம் இருப்பதால்  ‘அதிமதுரம்’, ‘மது’ கம் போன்ற பெயர்களும் உண்டு.  அதிமதுரம் குழந்தைகளுக்கு:      ஒரு வயதிற்கு மேல் உள்ள   குழந்தைகளுக்கு  சளி,இருமல் தொல்லை வராமல்  அதிமதுரம்  பயன்படுத்துவதன் மூலம் கட்டுக்குள் வைக்கலாம்.    அதிமதுரம் பொடி கலந்த நீரை  குழந்தைகளுக்கு  அடிக்கடி தருவது நல்ல பலன் தரும். நியாபக சக்தியை அதிகரிக்கவும், உடல் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாய் இந்த மூலிகை இருக்கும். ஆண்மை குறைவை நீக்க:    அதிமதுரம்  தூள் கலந்த நீரை தினமு...